நீட் தேர்வு ரத்து குறித்து பிரதமருடன் முதல்வர் ஆலேசனை

0

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய கோரி பிரதமரை சந்திக்க முதல்முறை டெல்லி செல்கிறார் முதல்வர். இது தவிர வேறு சில கோரிக்கைகளும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின்:

தமிழகத்தில் பல போராட்டங்களை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது திமுக அரசு. தற்போது சிறப்பாக ஆட்சி அமைத்து வருகிறது என அனைவராலும் பாரட்டப்பட்டுவருகிறது. சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கொரோனா நிவாரண தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், அரசு மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு ஒப்புதல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் அரசு காப்பீடு என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல்அதிகமாக இருக்கும் நேரத்தில் பதவியேற்ற ஸ்டாலின் அவர்களின் தீவிரமான நடவடிக்கைகளின் மூலம் நோய் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 17ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு நல திட்டடங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியுடன், கூடுதல் நிதியும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here