தமிழக அரசு பேருந்தில் அனைவர்க்கும் 50% கட்டண சலுகை.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!

0
தமிழக அரசு பேருந்தில் அனைவர்க்கும் 50% கட்டண சலுகை.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!
தமிழக அரசு பேருந்தில் அனைவர்க்கும் 50% கட்டண சலுகை.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!

தமிகத்தில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சட்டசபையில் ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கையை அமைச்சர்கள் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இயக்கூர்திகள் சட்டங்கள்- நிர்வாகத்தின் மானிய கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பொதுமக்கள் 6 வது முறை பயணிக்கும் போது கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு பேருந்துகளுக்கும் பொருந்தும்.

முதியோர், பெண்களுக்கு ரயில்வேத்துறை அறிவித்தபுதிய சலுகை., அரசாணை வெளியீடு!!!

  • சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், இத்துடன் சேர்த்து தமிழக அரசும் ரூ.5000 வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
  • அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகள், 10, 12ம் வகுப்பு இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி ஊக்குவிக்கப்படும்.
  • பேருந்து பணிமனைகளில் பெண்கள் உணவகங்கள் நடத்த அவர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்காக 4 இருக்கைகள் பிரத்யேகமாக தயார் செய்யபட்டு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகம் மற்றும் கடைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுடன் பல்நோக்கு பேருந்து நிலையமாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here