தமிழகத்தின் மதுவிலக்கு, மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் மே மாதம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருந்தது. இதன் பிறகு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்றம் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு எதிராக குற்றபத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கொடுத்திருந்த மனு 2 முறை தள்ளுபடி செய்த நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.