ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடித்த ரோஹித் சர்மா…, குஜராத் அணிக்கு எதிரான போட்டியால் நிகழ்ந்த சம்பவம்!!

0
ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடித்த ரோஹித் சர்மா..., குஜராத் அணிக்கு எதிரான போட்டியால் நிகழ்ந்த சம்பவம்!!
ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடித்த ரோஹித் சர்மா..., குஜராத் அணிக்கு எதிரான போட்டியால் நிகழ்ந்த சம்பவம்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான, 57 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், இஷான் கிஷன் 31, ரோஹித் சர்மா 29, நேஹால் வதேரா 15, விஷ்ணு வினோத் 30 என சீரான இடைவெளியில், தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 49 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 103* ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

SKY இன் அதிரடி சதத்தால் வென்ற மும்பை…..,27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி…..,

இந்த வெற்றியால், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகி உள்ளது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் 18 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 29 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், தொடர் 5 போட்டிகளுக்கு பிறகு 2 இலக்கத்தை அடைந்துள்ளார். மேலும், ஐபிஎல் அரங்கில் அதிக சிக்ஸர் விளாசி, ஏபி டி வில்லியர்ஸை (251) பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா (252) 2வது இடத்தை பிடித்துள்ளார். இதில், முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (257) உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here