MI vs GT போட்டிக்கு பிறகு ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்…, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார்??

0
MI vs GT போட்டிக்கு பிறகு ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்..., பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார்??
MI vs GT போட்டிக்கு பிறகு ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்..., பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார்??

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு, ஐபிஎல் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் குறித்து இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

இந்தியாவில், 10 அணிகளை மையமாக கொண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் 11 முதல் 12 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் புள்ளிப் பட்டியலும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பின்வருமாறு காணலாம். அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி தோல்வியை அடைந்தாலும், 16 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் முன்னிலை பெற்றுள்ளது.

ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடித்த ரோஹித் சர்மா…, குஜராத் அணிக்கு எதிரான போட்டியால் நிகழ்ந்த சம்பவம்!!

இந்த அணியை தொடர்ந்து, தலா 12 போட்டிகளில் விளையாடி உள்ள, CSK, MI மற்றும் RR ஆகிய அணிகள் 15, 14 மற்றும் 12 புள்ளிகளுடன் டாப் 4 இடத்தை பிடித்துள்ளனர். மேலும், LSG (11), RCB (10), KKR (10), PBKS (10), SRH (8) மற்றும் DC (8) புள்ளிகளுடன், 5 முதல் 10 வரையிலான இடத்தில் உள்ளனர். இந்த அணிகளில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என லீக் போட்டிகள் முடிவில் தெளிவாக தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here