இனி இதுலயும் டிக்கெட் எடுக்கலாம்…..,மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு….,

0
இனி இதுலயும் டிக்கெட் எடுக்கலாம்.....,மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு....,
இனி இதுலயும் டிக்கெட் எடுக்கலாம்.....,மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு....,

மெட்ரோ ரயில் சேவை சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்குகிறது. அந்த வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இப்படி இருக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்டுகளை பெறும் வசதியை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசதி நாளை (மே 17) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பயண இடம் உள்ளிட்ட விவரத்தை கொடுத்து, பணம் செலுத்தினால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு….,பிளேஆப் செல்லுமா?

இதற்காக, பயனர்கள் மெட்ரோ சேவை எண்ணிற்கு HI என டைப் செய்து, செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டு UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்த டிக்கெட்டை QR கோர்டு மூலம் ஸ்கேன் செய்து பயணங்களை மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here