தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் – ‘வெளியில் வராதீர்கள்’ எச்சரிக்கும் வானிலை மையம்..!

0

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெயில்

How to keep cool in Indian Summer : All tips and that too in a ...

கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரியும், பாளையங்கோட்டை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பமும் , மேலும் கோவையில் 99 டிகிரியும் சென்னை 97 டிகிரியும் வெப்பமும் நிலவியது.

104 டிகிரி

Severe heatwave grips Delhi at 44°C, mercury reaches 46°C at ...

விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் , திருத்தணி , வேலூர், ஆகிய 10 மாவட்டங்களில் நாளை 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here