கல்லூரி மாணவர்களிடம் அதிகரிக்கும் MDMA மாத்திரை மற்றும் LSD பேப்பர் போதை கலாச்சாரம்..!

0

தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் இடையே எம்டிஎம்ஏ போதை மாத்திரை மற்றும் LSD எனப்படும் பேப்பர் போன்ற போதை பழக்கவழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இது கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கடைசி 10 நாட்களில் மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

MDMA மாத்திரை மற்றும் LSD பேப்பர்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

LSD என்பது லிசேர்ஜிக் ஆசிட் டைஏதிலமைடு (Lysergic acid diethylamide C20H25N3O) இது ஸ்டாம்ப் பேப்பர் போன்ற பல வகைகளில் போதைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை உபயோகிக்கும் போது நம் நினைவுகளில் மாறுபடும், யோசிக்கும் திறனில் வித்தியாசமும் ஏற்படுகிறது. மேலும் தன்னைச் சுற்றி ஒருவர் இருப்பது போன்ற உணர்வையும் இது ஏற்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலை உயர்வு போன்ற உபாதைகள் உண்டாகின்றன.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

MDMA என்பது 3,4-Methyl​enedioxy​methamphetamine (C11H15NO2) ஆகும். இது மாத்திரை போன்ற வடிவத்தில் போதைக்காக பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் போது உடம்பில் திறன் அதிகரிப்பது போலவும், இன்பம் அதிகரிப்பது போன்ற உணர்வுகள் உண்டாகும். இதனை வாய் வழியே எடுத்துக்கொள்ளும் போது 30 – 45 நிமிடங்களில் செயல்பட ஆரம்பிக்கும் இது 6 மணிநேரம் வரை நீடிக்க கூடியது.

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய போதைப்பொருட்கள் தற்போது தமிழ்நாட்டிலும் காலடி எடுத்து விஸ்வரூபம் அடைந்து வருவதால் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here