இனி TNPSC தேர்வு எழுதவும் ஆதார் கார்டு அவசியம் – தமிழக அரசின் 6 முக்கிய சீர்திருத்தங்கள்..!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர் சிபிசிஐடி போலீசார். தினமும் விசாரணையில் புதுப்புது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்நிலையில் இனியும் அரசுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தடுக்க தமிழக அரசு 6 புதிய சீர்திருத்தங்களை வகுத்து உள்ளது. இவ்வாறு TNPSC தேர்வில் கொண்டுவரப்பட்டு உள்ள மாற்றங்கள்..,

  1. தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தும் நடைபெற்று முடிந்த உடன், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  2. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவு பெற்ற உடன், தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை இணையதளம் வழியே உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வசதி.
  3. கலந்தாய்வு நடக்கும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை வாரியாக, மாவட்ட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் & காலியிடங்கள் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  4. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, 3 மாவட்டங்களை தங்களுடைய விருப்ப தேர்வு மையமாக தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் தேர்வர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேர்வு மையத்தை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.
  5. தேர்வு எழுத வரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கபடுவர்.
  6. தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனுமிருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து, முழுவதும் தடுக்கும் உயர் தொழில் நுட்பத் தீர்வு நடைமுறைபடுத்தப்படும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here