மாயோன் பட நடிகை வெளியிட்ட ஹாப்பி நியூஸ்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா, கனடாவின் டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த வகையில் கடந்த செப்.,9 ம் தேதி தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட துறையில் மிகவும் பெரிய அளவில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த திரைப்பட விழாவில் “மாயோன்” திரைப்படம், சிறந்த புராண திரில்லர் திரைப்படம் என்ற விருதை பெற்றுள்ளதாக, அந்த திரைப்பட நடிகை தன்யா இரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதாவது கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே எஸ் ரவிக்குமார் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்த திரில்லர் திரைப்படம் மாயோன்.

இந்த படத்தினை தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் புதையலை தேடும் மிகவும் சுவாரஸ்யமான படமாக உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here