இந்தியா VS பாகிஸ்தான்.., டிக்கெட் விற்பனை முடிந்து விட்டது.., ஓ இது தான் காரணமா??

0

T20 உலக கோப்பை போட்டிகளுக்கு இதுவரை அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ICC அறிவிப்பு!!

ஆசிய கோப்பை போட்டி முடிவடைந்து தற்போது T20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதில் இந்தியா தனது முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு மீண்டும் போட்டியிட உள்ளனர். இதனால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுப்பார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற போட்டிகளுக்கு இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ICC தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட் விற்பனை மூலம் T20 உலக கோப்பையை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here