த்ரிஷா பற்றி ஆபாச கருத்து., மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த லியோ பட பிரபலம்!!

0
த்ரிஷா பற்றி ஆபாச கருத்து., மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த லியோ பட பிரபலம்!!
த்ரிஷா பற்றி ஆபாச கருத்து., மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த லியோ பட பிரபலம்!!

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் லியோ. இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அதாவது இதுவரை நான் நடித்த பல படங்களில் பல நடிகைகளுடன் ரேப் சீன்களில் நடித்துள்ளேன். ஆனால் லியோ படத்தில் அப்படி ஒரு காட்சி கூட த்ரிஷாவுடன் இடம்பெறவில்லை எனக் கூறி இருந்தார்‌. இப்படி மன்சூர் அலி கான் பேசியதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது இப்படி ஒரு அருவருப்பான மனிதருடன் இணைந்து நான் படம் நடித்ததை நினைத்து மிகவும் வருந்துகிறேன். மேலும் இனி என்னுடைய சினிமா கெரியரில் இவர் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் நான் இணைந்து நடிக்கப் போவதில்லை என கோபமாக கூறி கண்டம் தெரிவித்துள்ளார். இதையடுத்து லியோ பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடன் பணியாற்றும் சக பெண் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று என கருத்து தெரிவித்துள்ளார்.

கையும் களவுமாக சிக்கிய விசித்ரா., கமலின் கேள்வியால் ஆடிப்போன அர்ச்சனா., பரபரப்பான காட்சிகளுடன் BB ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here