தமிழகத்தில் முதியோர் உதவி தொகையில் முறைகேடு.., ரூ.27 லட்சம் அபேஸ்.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!!

0
தமிழகத்தில் முதியோர் உதவி தொகையில் முறைகேடு.., ரூ.27 லட்சம் அபேஸ்.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!!
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது முதியவர்கள் உதவித்தொகை பெறும் வகையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் உயிரிழந்தால் அவர்களின் வங்கி கணக்கு தானாக செயலிழந்துவிடும். மேலும் இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலும் அது திரும்ப தமிழக அரசின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட இருந்த ரூபாய் 27 லட்சம் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் வரம் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பணத்தை எடுக்காமல் வைத்திருக்கும் முதியவர்கள் வங்கிக் கணக்கில் இருந்தும் சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மோசடிகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற புகார்கள் வருவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் யார் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை விசாரணை செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும். மேலும் இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here