அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராக இந்தியர் நியமனம் – குவியும் பாராட்டுக்கள்!!

0

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனுக்கு துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் ஓருவர் தேர்வாகியுள்ளார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

அமெரிக்கா:

அமெரிக்காவில் நடந்த அதிபருக்கான தேர்தலில் பல பிரச்சனைகள் நடந்தது. மேலும் தேர்தலில் தோல்வியை சந்தித்த டிரம்ப் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஜோ பைடன் பதிவு ஏற்பதற்குள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இந்த மாதிரியான பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்ற பின்பு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். தற்போது இவரது துணை உதவியாளர் குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான் மஜூ வர்க்கீஸ். இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஜோ பைடனின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியாகவும் மற்றும் மூத்த ஆலோசகராகவும் திகழ்ந்தார். மேலும் இவர் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை கவனித்த குழுவிலும் இடம் பிடித்தார்.

கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தான் முடிவு எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி பேட்டி!!

இவர் முன்னதாக அமெரிக்க அதிபராக திகழ்ந்த ஒபாமாவின் ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையில் பல பொறுப்புகளில் செயல்பட்டார். இந்நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனின் துணை உதவியாளராகவும் மற்றும் வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here