ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் – 11 லட்ச பேரின் வேலைக்கு திண்டாட்டம்!!

0

இந்திய சந்தையில் மிக பெரிய வர்த்தக ஒப்பந்தமாக பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீ டைல் – பியூச்சர் ஒப்பந்தத்திற்கு அமேசான் நிறுவனம் தடை உத்தரவை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ரீ டைல் – பியூச்சர்:

சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அமேசான் நிறுவனம் பியூச்சர் குரூப் நிறுவனத்துடன் முதலீடு செய்து வர்த்தகம் செய்து வந்தது. இந்நிலையில் பியூச்சர் குரூப் நிறுவனம் தனது வர்த்தகத்தை ரிலைன்ஸ் ரீ டைல் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மீறி விற்பனை செய்தது. இதுகுறித்து அமேசான் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு தற்போது உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஒப்பந்தம் தற்போது நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் நிலவி வருகிறது. தற்போது இதுகுறித்து தகவல் தெரிவித்த டெல்லியை சேர்ந்த என்ஜிஓ வெளியிட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் ரீ டைல் – பியூச்சர் குரூப் இடையே செய்யப்பட்ட ரூ.24,713 கோடி அளவிலான ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் சுமார் 11 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பியூச்சர் குரூப் கடன் நெருக்கடியில் இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராக இந்தியர் நியமனம் – குவியும் பாராட்டுக்கள்!!

தற்போது கடனை திரும்ப பெரும் வகையில் அனைத்து வங்கியும் தங்களது பணிகளை துவக்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ரீ டைல் – பியூச்சர் குரூப் ஒப்பந்தம் தோல்வி அடைந்தால் பெரிய நிதி பிரச்னை ஏற்படும். மேலும் அமேசான் நிறுவனமே பியூச்சர் குரூப் நிறுவனத்தையும் மற்றும் அதன் வர்த்தகத்தையும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுவிடும். மேலும் பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு கீழ் 450 நகரங்களில் சுமார் 2000கும் அதிகமான ரீ டைல் கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here