கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தான் முடிவு எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி பேட்டி!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து திமுக கட்சி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அழகிரி தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொகுதி பங்கீடு:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர். தற்போது தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக வேகமாக செய்து வருகின்றனர். மேலும் தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலிலும் திமுக கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி. அவர் கூறியதாவது, இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து திமுக கட்சி தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் – வழிமுறைகள் இதோ!!

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு தனி பலம் உள்ளது. இதனை ராகுல் தமிழகம் வந்த பொழுது அனைவரும் அறிந்தார்கள். அனைத்து கட்சிகளும் தங்களின் தலைவர்கள் வரும் பொழுது பணம் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பார்கள். ஆனால் ராகுலின் வருகைக்கு பணம் இல்லாமல் மக்கள் கூட்டம் சேர்ந்தது. மேலும் கூட்டத்திற்கு பணம் கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் பணமில்லை. காங்கிரஸ் கட்சியால் தான் வளர்ச்சியை கொண்டுவர முடியும் என்று மக்கள் நம்பி வருகிறார்கள் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here