‘குக் வித் கோமாளி’ புகழா இது?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

‘குக் வித் கோமாளி’ புகழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முன் அவர் இருந்த தோற்றம், தற்போது அவரது ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

‘குக் வித் கோமாளி’ புகழ்

அவ்வளவு எளிதாக சினிமாவில் யாரும் உயரத்தை அடைய முடியாது என்பதற்கு ஒவ்வொரு பிரபலங்களின் பின்னணியும் எடுத்துக்காட்டாக உள்ளது. சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணங்களை கேட்கும்போதெல்லாம் கண்ணீர் சொட்டிவிடும். இன்று பெரிய திரையில் ஜொலிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பின்னால் ஏகப்பட்ட அவமானங்களும், கண்ணீர்களும் உண்டு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெரிய கதாநாயகர்களுக்கே இந்த கண்ணீர் கதை என்றால், சிறிய, வளர்ந்து வரும் பிரபலங்களுக்கு பின்னால் உள்ள வலிகள் எத்தனை இருக்கும். வெளியே இருந்து பார்க்கையில் சினிமா வாழ்க்கை பகட்டான வாழ்க்கையை போல தான் தெரியும். சினிமாவில் பெரிய உயரத்தை அடைவது என்பது ஏகப்பட்ட தடைகளை தாண்டிய பின்னால் தான் கிடைக்கும் என்று பல திரையுலக பிரபலங்கள் சொல்ல கேட்டிருப்போம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – முதல்வர் படம் பதிந்த புத்தக பைகள் பறிமுதல்!!

அந்த வகையில் சின்னத்திரை பிரபலம் புகழின் வாழ்க்கை பயணம் மற்றும் அவரது சினிமாவுக்கு முந்தய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடலூரிலிருந்து சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்த புகழின் கடந்த கால வாழ்க்கை பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. சினிமாவில் இத்தனை ஆண்டு பயணத்தில் இவருக்கென தனி அடையாளம் கிடைத்தது ‘குக் வித் கோமாளி’ நிகச்சியில் தான்.

முன்னதாக புதிதாக கார் வாங்கியுள்ள புகழ் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் நம் வாழ்க்கை எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம். முயற்சி செய்து கொண்டே இருங்கள் என கூறினார். புகழின் இந்த பதிவுடன் அவரது பழைய புகைப்படத்தையும் இணைத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here