ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

0
Lock
Lock

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Maharastra CM
Maharastra CM

கராச்சியில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் – 9 பேர் உயிர் இழப்பு..!!

தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர்உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி ஊரடங்கு உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடைபெற்று உள்ளது. இதில் ஊரடங்கை நீட்டிக்க பரிசீலனை செய்யவில்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here