ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கு – கூகுள் நிறுவனம் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்!!

0
madurai highcourt latest
madurai highcourt latest

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கடன் தரும் செயலிகளை தடை செய்ய கோரிய வழக்கில் கூகிள் நிறுவனம் பதில் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை கிளையில் மனு கொடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றது.

சட்டவிரோதமான செயலிகள்:

இன்று நாம் இருக்கும் அவசரமான சுழலில் நமக்கு நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கூட நேரம் இருப்பதில்லை. இதன் காரணமாக அனைத்து வசதிகளும் நமது கைக்குள் மொபைல் மூலமாக கிடைத்து விடுகிறது. இதில் ஒரு பகுதியாக கூகிள் பிலேஸ்டோரில் சுலபமாக கடன் வழங்கும் செயலிகள் இருந்து வந்தன. இதில் பல குளறுபடிகள் நடந்து கொண்டு இருப்பதாக புகார் எழுந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில செயலிகள் முறையற்று, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகும் கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகளான சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செயலிகள் மூன்றாம் தர நடவடிக்கைகளை மேற்கொள்வது முறையற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிப்பு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

ஒன்லைன் மூலமாக கடன் தரும் செயலிகள் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள எந்த விதமான நடவடிக்கைகளையும் பின்பற்றுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகின்றது. இந்த செயலிகள் மூலமாக சமூக விரோதிகள் நாட்டில் நுழைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதனால் இது போன்ற செயலிகளை தடை செய்வது குறித்து கூகிள் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here