மதுரை சேர்ந்த பெண் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு – தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு!!!

0
மதுரை சேர்ந்த பெண் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு - தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு!!!
மதுரை சேர்ந்த பெண் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு - தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு!!!

ஒலிம்பிக் 2021 இந்த ஆண்டு நடைபெற போகிறது. இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள மதுரை சேர்ந்த வீராங்கனை பங்கு பெற உள்ளார், தமிழகத்தில் இருந்து 11 வீரர்கள் பங்குகொள்ள போகிறார்கள்.

11 தமிழக வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு…

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டி கொரோனா ஊரடங்காள் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் ஜப்பானில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் திட்டமிட்டபடி டோக்கியோவில் நடைபெறபோகிறது. ஒலிம்பிக்கை நடத்த பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. கொரோனா பரவல் இருக்கும் இந்தவேளையில் ஒலிம்பிக் தேவையில்லை. இதனால் மக்கள் மற்றும் வீரர்களுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று கடும் எதிர்ப்பு வந்த நிலையில், முறையான பாதுகாப்புடனும் கட்டுபாடுகளுடன் திட்டமிட்டபடி நடத்துவோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது,

11 தமிழக வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு...
11 தமிழக வீரர்கள் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு…

இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு பிரிவுகளில் இருந்து வேறு வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர். அதற்க்கான தேர்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழத்தில் இருந்து தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப் படகு போட்டிகளில் பங்கு பெற 11 வீரர், வீராங்கனைகள் தேர்வாகி உள்ளனர். மற்றும் இந்தியாவில் இருந்து தடகள பிரிவில் 26 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறப்போகிறதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதில் 17 பேர் ஆண்கள் பிரிவிலும் 9 பேர் பெண்கள் பிரிவிலும் கலந்துகொள்வார்கள். இதில் தமிழகத்தில் இருந்து 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த பெண் ஒலிம்பிக்கு தேர்வு…

மதுரையை சேந்த ரேவதி நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பாக தடகள அணியில் தேர்வாகியுள்ளார். இவருக்கு வயது 22 ஆகிறது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் ஆவார். 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்துவந்த அவர், 12ம் வகுப்பு படித்தபோது ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். ரேவதியின் திறமையை பார்த்த பயிற்சியாளர் கண்ணன், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பல போட்டிகளுக்கு தயார்படுத்தியுள்ளார். பின்னர் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த பெண் ஒலிம்பிக்கு தேர்வு...
மதுரையை சேர்ந்த பெண் ஒலிம்பிக்கு தேர்வு…

வெறும் காலில் ஷூ கூட அணியாமல் பயிற்சி பெறுவார். இவரின் இந்த விட முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மிக பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தகுதிச்சுற்றில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 53.55 விநாடிகளில் இலக்கை அடைந்தார். ரேவதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் இருக்கும் ஒரு மையத்தின் மூலமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரேவதி இந்திய தடகள அணி சார்பில் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டபந்தயத்தில் திருச்சி தனலெட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகியோருடன் பங்கேற்க போகிறார்கள். 4 * 400 மீட்டர் ஆடவர் பிரிவின் தொடர் ஓட்டபந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் போகிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here