இனி செல்போனில் விளம்பர தொல்லை இல்லை.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

0
Woman using smartphone. The concept of using the phone is essential in everyday life.

விளம்பர நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு கால் மற்றும் மெசேஜ் அனுப்பும் நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது செல்போன் உபயோகிக்காத மனிதர் இல்லை. அனைவரின் கையிலும் செல்போன் வந்துவிட்டது. அதேசமயம் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்களை சேகரித்து பல நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் விற்பனை நோக்கில் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் வண்ணம் உள்ளனர். இதை கட்டுக்குள் கொண்டுவர தற்போது தொலை தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது.

 

அதன்படி செல்போன் வைத்திருப்பவர்களுக்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அழைப்பு, குறுஞ்செய்தி மூலம் தொல்லை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் 10 முறை தொந்தரவு செய்தால் 1000 ரூபாயும், 10 முதல் 50 முறை தொந்தரவு செய்தால் 5000 ரூபாயும், அதற்கும் மேற்பட்ட முறை தொந்தரவு செய்தால் 10000 அபராதம் அந்நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here