அரசு பேருந்தை தொடர்ந்து தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை – தனியார் போக்குவரத்து அதிரடி!!

0

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார். தற்போது இதேபோல் தனியார் பேருந்தும் பெண்களுக்கு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

பெண்களுக்கு இலவசம்:

தமிழகத்தில் திமுக கட்சி 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சரத்தின் பொழுது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போது அமலாக்கி வருகிறார். தற்போது அந்த வகையில் தான் அரசு நகர பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இனி கட்டணமில்லாமல் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற சில மணி நேரத்திலே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து தனியார் பேருந்து ஒன்றிலும் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அதற்கான விலைப்பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா??கங்குலி விளக்கம்!!

அதன்படி அதில் கூறியிருந்ததாவது, பேருந்தில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் ரூ.2 ஆகவும் மற்றும் ஆண்கள் பயணம் செய்ய கட்டணம் ரூ.10 ஆகவும் அதில் தெரிவித்திருந்தது. தற்போது இந்த தகவலினால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here