லோகேஷ் கனகராஜ் கதைக்கு ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார் – விரைவில் வெளியாகும் மாஸ் அப்டேட்!!

0
லோகேஷ் கனகராஜ் கதைக்கு ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார் - விரைவில் வெளியாகும் மாஸ் அப்டேட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ள படம் பற்றிய முக்கிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ் அப்டேட் :

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில், உலக நாயகன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தையடுத்து, விஜய் இயக்கத்தில் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். அதற்கான, வேலைகளில் தற்போது இவர் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஆகிய இருவரும் புதிய படம் குறித்து, ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில், லோகேஷ் சொன்ன கதையை சல்மான் கான் ஓகே செய்து விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த முறையான அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி புரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், இயக்குனர் லோகேஷ் தனது ஆதிக்கத்தை பாலிவுட்டில் காட்ட அடியெடுத்து வைத்து விட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here