மக்களவை தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி., திமுக கட்சி சார்பிலா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் வர இருப்பதையொட்டி, பல அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்ற பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், நடிகர் வடிவேலு திமுக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்தது.

இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து நடிகர் வடிவேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது “மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நான் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.” என பதிலளித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் முறை.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here