பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் வெட்டுக்கிளிகள்..! 1,75,000 ஏக்கர் பயிர்கள் காப்பான் பட பாணியில் நாசம்..!

0

பாகிஸ்தான், சோமாலியா ஆகிய இரு நாடுகளில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அம்மாநில விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அம்மாநில அரசுகளும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர்.

காப்பான் பட பாணி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

சூர்யா நடித்த காப்பான் படத்தில் கார்பொரேட் வில்லன் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகளை படையெடுக்க வைத்து விவசாய நிலங்களை பாழாக்க திட்டமிட்டு இருப்பான். இதை போன்றே சோமாலியாவிலும், பாகிஸ்தானிலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து அங்குள்ள விவசாய நிலங்களை பாழாக்கி வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை வெட்டுக்கிளிகள் பாழாக்கி உள்ளன. இதனால் அந்த நாடு விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

1,75,000 ஏக்கர் பயிர்கள் சேதம்..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் வெட்டுக்கிளிகள் அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனை வைத்து ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா நாட்டில் தற்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.

பாகிஸ்தானையும் விட்டுவைக்கவில்லை..!

நமது அண்டை நாடான பாகிஸ்தானையும் வெட்டுக்கிளிகள் விட்டுவைக்கவில்லை. அங்கு தெற்கு மாகாணமான சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்டவைகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துவருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உதவி செய்ய முன்வந்து உள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

எதனால் நடக்கிறது..?

தற்போது நிலவி வரும் தட்பவெட்ப நிலை அவற்றின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவது மிகுந்த கடினமாக உள்ளது. ஏப்ரல் 2020 வரை இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்கும் ஆபத்தா..?

பாகிஸ்தான் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அந்நாட்டின் வழியாகவே இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதுவரை குஜராத்தின் நான்கு மாவட்டங்களில் இந்த வெட்டுக்கிளிகள் விவசாயப் பயிர்களை நாசமாக்கியுள்ளன. இதன் வீரியம் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here