மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?? சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி அறிக்கை!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கோரா தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதன் பின் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தினசரி கொரோனா பாதிப்பு 2500 யை கடந்துள்ளது.

அதில் குறிப்பாக தலைநகரான சென்னையில் மட்டும் 50% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஷாக் நியூஸ்.. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - 22 ஆயிரத்தை நெருங்கிய தொற்று எண்ணிக்கை!

இதனை தொடர்ந்து மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பது அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு மாதாந்திர தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டும் மற்றும் பூஸ்ட் தடுப்பூசி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதால் முழு ஊரடங்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டால் முதல்வருடன் கலந்துரையாடல் செய்து தேவைப்பட்டால் கொண்டு வரலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here