நாடு முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

0

கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களில் கிட்டத்தட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Lock
Lock

இருப்பினும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான மால்கள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பயிற்சி மையங்கள் போன்றவற்றில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. மேலும் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கூறியுள்ளது.

  1. பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், கொரோனா நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  2. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வந்தாலும், கொரோனா பரவல் இன்னும் முடிவடையவில்லை. இதனால் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த ‘ஜன் அந்தோலன்’ திட்டத்தின் படி மக்கள் 3 முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவை, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றுவது.
  3. நெருங்கி வரும் பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
  4. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
  5. மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் போன்ற எவ்வித அனுமதியும் தேவையில்லை. மேலும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியில் ஊரடங்கு உத்தரவில் எவ்வித கூடுதல் விதிமுறைகளையும் விதிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here