லெஜண்ட்ஸ் லீக்: விக்கெட் இழப்பின்றி வென்ற இந்திய மஹாராஜாஸ்…, அதிரடி காட்டிய உத்தப்பா & கவுதம் கம்பீர்!!

0
லெஜண்ட்ஸ் லீக்: விக்கெட் இழப்பின்றி வென்ற இந்திய மஹாராஜாஸ்..., அதிரடி காட்டிய உத்தப்பா & கவுதம் கம்பீர்!!
லெஜண்ட்ஸ் லீக்: விக்கெட் இழப்பின்றி வென்ற இந்திய மஹாராஜாஸ்..., அதிரடி காட்டிய உத்தப்பா & கவுதம் கம்பீர்!!

கத்தாரில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் ஆசியா லென்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது.

லெஜண்ட்ஸ் லீக்:

சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களுக்காக, லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 3வது சீசன் கத்தார் தலைநகர் தோகாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில், இந்திய மஹாராஜாஸ், ஆசியா லென்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா இரு முறை போட்டியிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய மஹாராஜாஸ் தனது 3 லீக் போட்டியில், ஆசியா லென்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இதில், டாஸ் வென்ற இந்திய மஹாராஜாஸ் அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய, ஆசியா லென்ஸ் அணியில் உபுல் தரங்கா (69) மற்றும் தில்ஷான் (32) என முதல் விக்கெட்டுகை 73 ரன்கள் குவித்து அசத்தினர். இவர்கள் ஒரு கட்டத்தில் வெளியேற, ஆசியா லென்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை குவித்தது.

இந்தியாவிற்கு வந்த டேவிட் வார்னர்…, மும்பையை அடைந்தவுடன் அவர் செய்த செயலை பாருங்கள்!!

158 ரன்களை இலக்காக கொண்டு, களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணியில் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் கவுதம் கம்பீர் அதிரடியாக விளையாடி 12.3 ஓவரிலேயே இலக்கை அடைந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இதில், ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 11 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 88* ரன்களும், கவுதம் கம்பீர் 36 பந்தில் 12 பவுண்டரி உட்பட 61 ரன்களும் எடுத்து அசத்தினார். இதனால், இந்திய மஹாராஜாஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆசியா லென்ஸ் அணியை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here