மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
scholarship

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி போன்றவற்றில் பயிலும் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ரூபாய் 2 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துளார்.

கல்வி உதவித்தொகை:

வருடம் தோறும் ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்ததப்பட்ட, மற்றும் சீர்மரபின மாணவ மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் 2020-2021ம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் “முதல் கட்டமாக 100 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்றும் இந்த உதவித்தொகையினை பெறும் மாணவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். அவர்கள் மத்திய அரசின் கல்வி நிறுவங்களிலோ பல்கலைகழகங்களிலோ பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

‘கொரோனாவை விரட்டுவது போல திமுகவை விரட்ட வேண்டும்’ – முதல்வர் பேட்டி!!

மேலும் முதன்முறை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதை தங்களது கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களில் கல்வி நிறுவனங்கள் தங்களது சான்று ஒப்பத்தினை இட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here