புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்… உடனே செஞ்சு பாருங்க!!!

0
புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்... உடனே செஞ்சு பாருங்க!!!
புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்... உடனே செஞ்சு பாருங்க!!!

புரட்டாசி மாதம் தொடங்கினாலே அடுத்தடுத்து விழாக்கள் வர ஆரம்பித்துவிடும். அதற்கு அப்பறம் என்ன இல்லத்தரசிகளுக்கு வேலை தான். விதவிதமான இனிப்பு வகைகள், உணவு தின்பண்டங்கள் செய்ய வேண்டியிருக்கும் . மேலும் ஒரு சிலர் அதிலும் வித்தியாசம் எதிர்பார்ப்பர். அவர்களுக்காக தான் இந்த பதிவில் மிகவும் வித்தியாசமாக வாழைப்பழத்தை வைத்து செய்யக்கூடிய நெய் அப்பம் ரெசிபியின் செய்முறையை காண உள்ளோம்.

புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்... உடனே செஞ்சு பாருங்க!!!
புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்… உடனே செஞ்சு பாருங்க!!!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 1 கப்

கோதுமை மாவு – 3 தேக்கரண்டி

ஏலக்காய் – 4

பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி

வாழைப்பழம் – 2

நெய் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் சிறிது கூட தண்ணீர் இல்லாதவாறு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த பச்சரிசி மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காட்சி கொள்ளவும்.

புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்... உடனே செஞ்சு பாருங்க!!!
புரட்டாசி மாத ஸ்பெஷலாக வாழைப்பழ நெய் அப்பம்… உடனே செஞ்சு பாருங்க!!!

அதன் பின்னர் அரைத்து வைத்து உள்ள பச்சரிசி மாவு, வாழைப்பழம், கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் காட்சி வைத்து உள்ள பாகு ஆகியவற்றை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் பணியார சட்டி அல்லது அப்ப சட்டியை வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அதில் கலந்து வைத்து உள்ள மாவு கலவையை பணியாரம் போன்று ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். தற்போது சூடான சுவையான நெய் அப்பம் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here