உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

0
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கைகள் பாயும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய எச்சரிக்கை:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. இது போக, நடத்தப்படாமல் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இரண்டு கட்ட தேதிகளை அண்மையில் அறிவித்தது.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

இது மட்டுமல்லாமல், இதற்கான வாக்காளர் பட்டியலை கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இது போக, தேர்தலுக்கான மனு தாக்கல் தேதியும், பிரச்சார கூட்டங்களுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் பணபலம் விளையாடுவதை தடுக்க முக்கிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் சட்ட நடவடிக்கை பாயும் – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

அதாவது,இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான ஊராட்சி மன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான ஏலம் நடக்கும். இந்த முறையை மேற்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த தேர்தலில், பண நாயகம் வெல்லாமல், ஜனநாயகம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here