அதிரடியாக வெளியான லால் சலாம் பட டிரைலர்., ரிலீஸுக்கு தடை விதித்த அரசு., மொத்த காரணமும் இதுதான்!!!

0
அதிரடியாக வெளியான லால் சலாம் பட டிரைலர்., ரிலீஸுக்கு தடை விதித்த அரசு., மொத்த காரணமும் இதுதான்!!!
கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் வசூலில் கல்லா கட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது மகள் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வரும் ஒன்பதாம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் ரிலீஸாவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று வெளியான லால் சலாம் படத்தின் ட்ரெய்லரில் இந்து – முஸ்லிம் மக்கள்  சண்டை போட்டு கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்து மற்றும்  முஸ்லீம் மக்களிடையே  வன்முறையை இப்படம் தூண்டிவிடும் என்ற அச்சத்தில், குவைத் அரசு லால் ஸலாம் படம் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here