பழிக்குப்பழி வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பரிதாபம்!!

0

ஐபிஎல் தொடரின் 18வது போட்டி சார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கேப்டன் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சார்ஜா ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். பெங்களூர் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. 

ஆரோன் பின்ச் 47 ரன்னிலும், படிக்கல் 32 ரன்னிலும் வெளியேற ஐபிஎல் தொடரின் அதிரடி ஆட்டக்காரர்களான டீவில்லியர்ஸ் மற்றும் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் விராட் கோஹ்லி பொறுமையாக விளையாட, மறுபுறம் டிவில்லியர்ஸ் கொல்கத்தா பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். சார்ஜாவில் வான வேடிக்கை காண்பித்த 6 சிக்ஸர்களுடன் 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். விராட் கோஹ்லி 33 ரன்கள் அடிக்க கடைசி வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கவில்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. சார்ஜா சிறிய மைதானம் என்பதால் இந்த இலக்கு எட்டிவிடும் தூரத்தில் தான் இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

சுப்மன் கில் (34) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் 16 ரன்களில் பெவிலியன் திரும்ப போட்டி முழுவதுமாக பெங்களூரு அணி பக்கம் திரும்பியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 112 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடந்த 2017ம் ஆண்டு இரு அணிகள் மோதிய போட்டியில் பெங்களூர் அணியை 49 ரன்களில் சுருட்டி, கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு 2 ஆண்டுகள் கழித்து பெங்களூர் அணி பழிக்குப்பழி வாங்கி உள்ளது. இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here