கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

0
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து 88,52 ஏக்கரில் 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூடிய விரைவில் பேருந்து நிலையத்தில் ATM மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது தவிர பேருந்து பயணிகளுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக தனி உணவகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here