ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை இந்தியன்ஸ் நட்சத்திரம்…, உருக்கமாக வெளியிட ட்விட்டர் பதிவு!!

0
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை இந்தியன்ஸ் நட்சத்திரம்..., உருக்கமாக வெளியிட ட்விட்டர் பதிவு!!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை இந்தியன்ஸ் நட்சத்திரம்..., உருக்கமாக வெளியிட ட்விட்டர் பதிவு!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கீரன் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கீரன் பொல்லார்ட்:

ஐபிஎல் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடப்பு ஆண்டு நடைபெற்ற சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில், 4 ல் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சீசனில் எப்படியாவது இழந்த இடத்தை எட்டி விட வேண்டும் என்று சீனியர் வீரர் கீரன் பொல்லார்ட் உட்பட 4 வீரர்களை விடுவித்து உள்ளது. இதில், கீரன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், 189 போட்டிகளில் விளையாடிய 3412 ரன்களை குவித்ததுடன் 69 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.

பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த இந்திய வீரர்…, கேப்டன்சியில் ஹர்திக் பாண்டியா வேண்டாமா??

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் மீண்டும் இவரை குறைந்த விலைக்கு அணியில் எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறியிருந்தது. ஆனால், கீரன் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை மிகவும் உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு, அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here