TNPSC குரூப் 1 தேர்வு : விடைத்தாள்கள் மதிப்பீடு குறித்து புதிய உத்தரவு., உயர் நீதிமன்றம் அதிரடி!!

0
TNPSC குரூப் 1 தேர்வு : விடைத்தாள்கள் மதிப்பீடு குறித்து புதிய உத்தரவு., உயர் நீதிமன்றம் அதிரடி!!
TNPSC குரூப் 1 தேர்வு : விடைத்தாள்கள் மதிப்பீடு குறித்து புதிய உத்தரவு., உயர் நீதிமன்றம் அதிரடி!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தமிழில் எழுதப்பட்ட முதன்மை தேர்வு விடைத்தாள்களை, மதிப்பீடு செய்யும் நபர்களுக்கான தகுதி குறித்த புதிய உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கு, TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகப் பணிகளில் வெளிமாநிலத்தவர், ஊடுருவலை தடுக்க தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற புதிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் குரூப்-1, தேர்வில் தமிழில் எழுதப்பட்ட முதன்மைத் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நபர்களுக்கான, வரைமுறைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்ணயித்துள்ளது. அதாவது 1ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே விடைத்தாள்களை, மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளது.

Ph. D பட்டப்படிப்பு மேற்கொள்வோர் கவனத்திற்கு., புதிய வழிமுறைகள் வெளியீடு – யுஜிசி அதிரடி உத்தரவு!!

ஆங்கில வழியில் படித்திருந்தாலும் கூட, தமிழ் விடைத்தாள்களை திறம்பட மதிப்பிடும் நபர்களும் இதற்கு தகுதி படைத்தவர்களே என தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் TNPSC குரூப்-1 தமிழ் வழி விடைத்தாள்களை, மதிப்பீடு செய்யும் நபர்களுக்கான புதிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here