பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த இந்திய வீரர்…, கேப்டன்சியில் ஹர்திக் பாண்டியா வேண்டாமா??

0
பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த இந்திய வீரர்..., கேப்டன்சியில் ஹர்திக் பாண்டியா வேண்டாமா??
பிசிசிஐக்கு அட்வைஸ் கொடுத்த இந்திய வீரர்..., கேப்டன்சியில் ஹர்திக் பாண்டியா வேண்டாமா??

நியூசிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இர்பான் பதான் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இர்பான் பதான்:

இந்திய அணி வரும் 18ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளனர். இந்த தொடரில், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியை தலைமை தாங்க உள்ளார். இவர் தலைமையின் கீழ் தான், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதன் முதலில் களமிறங்கி கோப்பையை தட்டி சென்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், இவர் தான் இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும், இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பை அடைய தவறியதால், இனி ரோஹித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்று பல தரப்பில் இருந்தும் கூறிவருகிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், கேப்டனை மாற்ற வேண்டும் என்று எண்ணினால் அதற்கான முடிவுகளிலும் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறியுள்ளார்.

மீண்டும் உலக கோப்பை இந்தியாவில் தானா?? ஐசிசி வெளியிட்ட அப்டேட்…, முழு விவரம் உள்ளே!!

இதனை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவுக்கு சாதாரணமாகவே போட்டிகளின் போது காயம் ஏற்படும். இதன் காரணமாக, இவர் சில சமயம் போட்டிகளில் இருந்து விலகி வருகிறார். ஒருவேளை இவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் உலக கோப்பை தொடருக்கு முன் காயம் ஏற்பட்டால், வேறு ஒரு கேப்டனை தேட வேண்டிய நிலை வரும். இதனால், தொடக்க வீரர்களை போல, ஒன்றுக்கு இரண்டு கேப்டன்களை தேர்வு செய்து தயார்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here