பாகுபலி படத்தின் சாதனையை தூக்கி சாப்பிட்ட KGF 2 – இந்திய சினிமாவில் உச்சம் பெற்று புதிய சாதனை!!

0
பாகுபலி படத்தின் சாதனையை தூக்கி சாப்பிட்ட KGF 2 - இந்திய சினிமாவில் உச்சம் பெற்று புதிய சாதனை!!
பாகுபலி படத்தின் சாதனையை தூக்கி சாப்பிட்ட KGF 2 - இந்திய சினிமாவில் உச்சம் பெற்று புதிய சாதனை!!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் ரிலீசான Kgf 2 திரைப்படம், இதுவரை 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து தனிப்பெரும் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாதனை:

பிரமாண்ட இயக்குனர், ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான மெகா பட்ஜெட் திரைப்படம் பாகுபலி. இந்த படம், இதுவரை இல்லாத அளவில், வசூலை வாரி குவிந்திருந்தது. இந்த படத்தின் பிரமாண்டமும், கதைக்களமும் பார்ப்போரை வியக்கச் செய்தது.

இதே போல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பாகுபலி 2. இந்த படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று, புதிய சாதனை படைத்தது. இந்த நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் ரிலீசான KGF 2 திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் புது உச்சம் தொட்டு வருகிறது.

இந்த நிலையில், KGF 2 படத்தின் புது வசூல் சாதனை குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, KGF 2 திரைப்படம் இதுவரை மொத்தமாக 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து, இந்த படம் 650 கோடி வசூல் செய்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதனை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர். இதுவரை பாகுபலி படத்தின், வசூல் மட்டுமே இந்திய திரையுலகில் உச்சம் பெற்று திகழ்ந்து வந்தது என்ற சாதனையை தற்போது, கன்னட திரைப்படமான KGF 2 முறியடித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here