விருந்தாளியா வந்த பாம்பு – நடுங்கி போன குடும்பத்தினர்!!!

0
விருந்தாளியா வந்த பாம்பு - நடுங்கி போன குடும்பத்தினர்!!!
விருந்தாளியா வந்த பாம்பு - நடுங்கி போன குடும்பத்தினர்!!!

கரூர் மாவட்டத்தில் அழையா விருந்தாளியாக வந்த நாக பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – விரைவில் தொடங்கும் அமைச்சர் பேட்டி!!!

விருந்தாளியை வீட்டில் சேர்க்க மறுப்பு:

நாடு முழுவதும் மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் நிலையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைள், கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த கொரோனா 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமலும் உறவினர்களை சந்திக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள வெள்ளைதரை பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்க்கு அழையா விருந்தாளியாக வந்தவரை வீட்டிற்க்குள் அனுமதிக்காமல் இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதாவது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரது வீட்டுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விருந்தாளியை வீட்டில் சேர்க்க மறுப்பு:
விருந்தாளியை வீட்டில் சேர்க்க மறுப்பு:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதை கண்டதும் கத்தி கூச்சல் போட்ட குடும்பத்தினரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பாம்பை தேடினர். மக்கள் வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு, பாம்பு இல்லை எங்கோ சென்றுவிட்டது எனக்கூறினர். இதனை கேட்காத குடும்பத்தினர் மறுபடியும் தேடி பார்க்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்.அதை ஏற்ற மக்கள் மறுபடியும் தேடி பாம்பை கண்டுபிடித்தனர்; பல மணிநேரம் போராடியும் ஆட்டம் காட்டிய பாம்பை பிடிக்க முடியாமல் போக வேறுவழி இல்லாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நாகப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here