ஏப்ரலில் வெளியாகும் கார்த்தியின் சுல்தான் – படக்குழு அறிவிப்பு!!

0

தற்போது நடிகர் கார்த்தி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் சுல்தான் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவிவினர் அதிகாரப்பூரவமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சுல்தான்:

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நடிகர்களுக்கும் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் தங்களது படம் பற்றிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். இவர் தற்போது லேட்டஸ்ட்டாக நடித்துள்ள திரைப்படம் தான் சுல்தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கன்னடம் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளம் வரும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களது ஜோடி எப்படி உள்ளது என்பதை பார்க்க ரசிகர்கள் காத்து வருகின்றனர். தற்போது சுல்தான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

சசிகலா காரில் அதிமுக கொடி – கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!!

இந்த படத்தின் டீஸர் இவர்களது ரசிகர்கள் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here