மீண்டும் இணையும் அண்ணன்- தம்பி காம்போ? அப்டேட் விரைவில்…,

0
மீண்டும் இணையும் அண்ணன்- தம்பி காம்போ? அப்டேட் விரைவில்...,
மீண்டும் இணையும் அண்ணன்- தம்பி காம்போ? அப்டேட் விரைவில்...,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி ‘கைதி 2′ திரைப்படத்தில் மாஸ் ஹீரோவாக களமிறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், அவர் ’96’ திரைப்பட இயக்குனருடன் கை கோர்த்து டூயட் பாடத் தயாராகி இருக்கிறார். அந்த வகையில், பிரேம் குமார் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இதையடுத்து, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கார்த்தி ஏற்கனவே சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here