பள்ளி மாணவர்களே சுற்றுலாவிற்கு ரெடியா?? அரசு செய்த சிறப்பு ஏற்பாடு!!

0
பள்ளி மாணவர்களே சுற்றுலாவிற்கு ரெடியா?? அரசு செய்த சிறப்பு ஏற்பாடு!!
ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று கல்வி ரீதியாகவும், பொழுதுபோக்கு ரீதியாகவும் ஆசிரியர்கள் கற்பித்து வருவது வழக்கம். கடந்த டிசம்பர் 2022ல் மட்டும் கர்நாடகாவில் சுமார் 2.20 லட்சம் மாணவர்கள் மைசூரு அரண்மனையை சுற்றி பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான போக்குவரத்து சேவையை அரசே வழங்கியும் வருகிறது. ஆனால், கர்நாடக அரசு மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை நடப்பு ஆண்டு நடைமுறைப்படுத்தியதை அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு KSRTC பேருந்துகளை அரசு வழங்குமா? என்பது பெரும் கேள்வி குறியாக இருந்தது. இந்நிலையில், பேருந்துகள் பற்றாக்குறை ஏதும் இல்லை, வழக்கம் போலவே கல்வி சுற்றுலாவிற்கு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பித்து பேருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்  என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here