ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் தனுஷின் ‘கர்ணன்’ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த கர்ணன் திரைப்படமானது மாரிசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பில் வெளியானது. திரையரங்கில் வெளியான இப்படம் தற்போது அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஓ.டி.டி யிலும் கர்ணன்:

அசுரன் படத்தி மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் இன் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை விருதுகள் பல வாங்கிய “பரியேறும் பெருமாள்” பட இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். சாதி அமைப்பை அடிப்படையாக கொண்ட இப்படத்தை மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்தார்.

சாதி அமைப்பினை அடிப்படையாக கொண்டு உரிமைகளுக்காக போராடும் சமூகத்தின் கதையாக மையமாக வைத்து உணர்வு பூர்வமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றதாலும் வருகிற 14ம் தேதி அமேசான் ஓ.டி.டியிலும் வெளியிட போவதாக சினிமா வட்டாரத்திலிருந்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


படம் வெளியாகி 1 மாதம் கூட முடியாத நிலையில் ஓ.டி.டி தளத்தில் கர்ணன் வெளியாவது அதிர்ச்சியளித்தாலும் மக்களை சென்றடைய வேண்டிய படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இத்திரைப்படம் கிராமப்புற நாடகமாக புகழ்பெற்று விளங்குகிறது. தனுஷ் அவர்களின் நடிப்பை தாண்டி அவர் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் எனவே கூறலாம். இவைகள் அனைத்துமே இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here