புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற உலக நாயகன் கமல் – அந்த மனசுதான் சார் கடவுள்!!

0

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற உலக நாயகன் கமல்ஹாசன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நேரில் ஆறுதல் :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், ஒரு மிகச் சிறந்த டான்சரும் கூட. கடந்த  அக்டோபர் மாதம் 29ம் தேதி, மாரடைப்பு காரணமாக புனித் மரணமடைந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகிற்கு ஒரு மிக பெரிய இழப்பாக கருதப்பட்டது. பல்வேறு திரைபிரபலங்கள் அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் தெரிவித்து சென்றனர்.

இந்த நிலையில், விக்ரம் பட ஷூட்டிங் வேலை காரணமாக பெங்களூர் சென்ற உலக நாயகன் கமல் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இவருடன், நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் உடன் சென்றிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் குறித்த இந்த மனிதநேய மிக்க செயல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here