கேன் வில்லியம்சன் சதத்திற்கு பின் உள்ள நியூசிலாந்தின் வெற்றி…, தொடரும் சாதனை பட்டியல்!!

0
கேன் வில்லியம்சன் சதத்திற்கு பின் உள்ள நியூசிலாந்தின் வெற்றி..., தொடரும் சாதனை பட்டியல்!!
கேன் வில்லியம்சன் சதத்திற்கு பின் உள்ள நியூசிலாந்தின் வெற்றி..., தொடரும் சாதனை பட்டியல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சன் சதம் அடித்ததன் மூலம், பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.

அதிக சதங்கள்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில், கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த விறுவிறுப்பான போட்டியில், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர சதம் அடித்து, முக்கிய பங்கு வகித்த கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த விருதின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்காக அதிக முறை (11) ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரராக கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். மேலும், கேன் வில்லியம்சன் தனது சொந்த மண்ணில் (14) சதம் அடித்த ஒரு டெஸ்ட் போட்டியில் கூட நியூசிலாந்து அணி தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், அந்நிய மண்ணையும் சேர்ந்து கேன் வில்லியம்சன் 16 போட்டிகளில் சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற 4வது வீரராக (அக்டிவ் பிளேயர்ஸ்) உள்ளார்.

Cutest picture of the day: மகள்களுடன் வெற்றியை கொண்டாடும் வீரர்கள்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 20 சதம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 19 மற்றும் டேவிட் வார்னர் 17 சதங்களுடன் முதல் மூன்று இடங்களில், உள்ளனர். இவர்களை தொடர்ந்து, 4வது மற்றும் 5வது இடத்தில் விராட் கோலி மற்றும் புஜாரா தலா 13 சதங்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here