பொதுத்தேர்வு கண்காணிப்பு பணி ஆசிரியர்கள் திடீர் கோரிக்கை.,விரைவில் புதிய நடைமுறை வெளியாக வாய்ப்பு!!

0
பொதுத்தேர்வு கண்காணிப்பு பணி ஆசிரியர்கள் திடீர் கோரிக்கை.,விரைவில் புதிய நடைமுறை வெளியாக வாய்ப்பு!!
பொதுத்தேர்வு கண்காணிப்பு பணி ஆசிரியர்கள் திடீர் கோரிக்கை.,விரைவில் புதிய நடைமுறை வெளியாக வாய்ப்பு!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு மையங்களில் பணி நியமனம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுத்தேர்வு ஆசிரியர்:

தமிழ்நாட்டில் +1, +2க்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் தேர்வு மையம், வினாத்தாள் அச்சீடு, கண்காணிப்பு ஆசிரியர் என பல்வேறு ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்வு மையப்பணிகளில் ஆசிரியர்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பொதுத்தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர், பறக்கும் படை என ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள தேர்வு மையங்களை கணக்கிட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர்களின் இருப்பிட முகவரியில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசியலின் அடுத்த கட்டத்தில் குஷ்பூ., டாப் கியர்ல போயிட்டு இருக்கீங்களே? குவியும் வாழ்த்து!!

மேலும் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரிலே தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் கல்வித் துறை என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here