தமிழக பள்ளி மாணவர்களே கவனம்., இந்த மாசம் இத்தனை லீவா? மார்ச் மாத காலண்டர் வெளியீடு!!

0

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் எத்தனை விடுமுறை மற்றும் வேலை நாட்கள் என்பது குறித்த காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

காலண்டர் வெளியீடு:

பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான பணிகளும் தேர்வு இயக்ககத்தால் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான, பள்ளி காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4ம் தேதி அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள், 6ம் தேதி மாசிமகம், 7 ஆம் தேதி ஷாபி பரஆ அத், 24 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடக்கம் போன்ற பண்டிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோக, 22 ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போக 4ம் தேதி சனிக்கிழமை முதல்வரின் விசிட்டையொட்டி தென் மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 13ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது, சூழலுக்கு தகுந்து மாற்றப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here