இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாபா, வேட்டையாடு விளையாடு, மயக்கம் என்ன, கில்லி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து மீண்டும் உலக நாயகனின் இன்னொரு பேமஸ் ஆன திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
IND vs AUS டெஸ்ட் தொடர் 2024-25.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!
அதாவது கமலின் எதார்த்த நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான குணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வரும் ஜூன் 21ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.