கார் மோதி கோர விபத்து.,பைக்குடன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் – கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!!

0
கார் மோதி கோர விபத்து.,பைக்குடன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!!
கார் மோதி கோர விபத்து.,பைக்குடன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோட்டில் அதிவேகத்துடன் வந்த கார், பைக்கில் வந்த இளைஞரை அடித்து தூக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

விபத்து:

சமீபகாலமாக தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. காவல் துறையினர் என்னதான் அதி வேகத்தில் செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒரு சிலர் அதை கண்டு கொள்வதே இல்லை. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோட்டில், பைக்கில் வந்த ஒரு இளைஞர் சாலையில் திரும்பும் போது, எதிர் பாரத விதமாக அதே பாதையில் வேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று,அந்த இளைஞரை அடித்து தூக்கி, எறிந்து விட்டு நிற்காமல் சென்றது.

TET தேர்வில் நடந்த குளறுபடி – அட்மிட் கார்டில் அதிர்ச்சி புகைப்படம்! தேர்வுத்துறை புதிய விளக்கம்!!

அந்த இளைஞன் சினிமா பாணியில் “Air “ல் பறந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த காவல்துறை, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி காரில் சென்ற நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here