உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு…, 3 பிரிவுகளில் டாப் 10 யில் நுழைந்து இந்திய வீரர்கள் அபாரம்!!

0
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., 3 பிரிவுகளில் டாப் 10 யில் நுழைந்து இந்திய வீரர்கள் அபாரம்!!
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., 3 பிரிவுகளில் டாப் 10 யில் நுழைந்து இந்திய வீரர்கள் அபாரம்!!

ஹைலோ ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய வீரர்கள் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பேட்மிண்டன் தரவரிசை:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF), பேட்மிண்டனில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின், இளம் வீரரான லக்ஷ்யா சென் இந்த வருடத்தில், காமன்வெல்த் மற்றும் தாமஸ் கோப்பை இரண்டிலும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதால் டாப் 10 யில் நுழைந்திருந்தார்.

சானியா மிர்சாவின் ரகசிய பதிவு…, விவாகரத்து உறுதியா?? சோகத்தில் ரசிகர்கள்!!

இதனை தொடர்ந்து, பாரிஸ் ஓபனில் சிறப்பாக செயல்பட்டதால், உலக தரவரிசையில் தற்போது 8 வது இடத்திலிருந்து 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போல, ஹைலோ ஓபனில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை சென்றிருந்த, ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்த தரவரிசையில், 5 இடங்கள் முன்னேறி 23 வது இடத்தை பிடித்துள்ளனர்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆடவர்க்கான இந்த பட்டியலில், பிரெஞ்சு ஒபனை கைப்பற்றிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி 7 வது இடத்தை எட்டியுள்ளனர். மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசையில், பி வி சிந்து தொடர்ந்து 5 வது இடத்தை தக்க வைத்துள்ளார். இந்த BWF தரவரிசையில் இந்தியா வீரர்கள் அனைவரும் முன்னேற்றமே அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here